Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

13 டிச., 2025

டிசம்பர் 13, 2025

மன ஒருமைப்பாடும் ஆரோக்கியமும்

மன ஒருமைப்பாடு MCQ தேர்வு

🧘‍♀️ மன ஒருமைப்பாடு மற்றும் நலவாழ்வு MCQ தேர்வு

ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண். மொத்தம்: 11 மதிப்பெண்கள்.

10. ஒரு நல்ல பிள்ளையாக இருக்க என்னால் முடியும்... எனது உள அமைதியை எனது வீட்டாருக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?

11. எனது உள்ளத்தின் அமைதியை எனது நண்பர்களும் எனது வீட்டாரும் உணரட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந் படிமுறைக்குரியதாகும்?

12. நான் பெற்ற உள அமைதி எனது நண்பர்களுக்கும்... முழு நாட்டிற்கும் பகிர்கின்றேன். நான் வீட்டிற்கும் பாடசாலைக்கும் முழு நாட்டிற்கும் என எந்த தியான செயற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது?

13. எனது தலை தளர்ந்து விட்டது எனது முழு உடலும் தளர்ந்து விட்டது என்ற செயற்பாடுகள் மனதை ஒரு நிலைப்படுத்தும் படிமுறைகளில் எத்தனையாவது?

14. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டின் சரியான படிநிலை?

15. உடல், உள சுகத்திற்கான செயற்பாடுகளின் மூன்றாம், நான்காம் படிமுறைகள் யாவை?

16. குறைவாக நீர் அருந்தும் ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று

17. வெள்ளைப் பிரம்புடன் ஒருவரை வீதியில் கண்டவுடன் நீர் செய்ய வேண்டியது?

18. சூரிய நமஸ்காரத்தில் ஈடுபட மிகவும் பொருத்தமான நேரம்

19. நான் சுற்றுப்புற ஒலிகளை செவிமடுக்கின்றேன்... அடுத்துள்ள வகுப்புக்களில் ஒலியையும் நன்றாக செவிமடுக்கின்றேன் என்ற செயற்பாடுகள் தியான செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?

20. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?

🎉 தேர்வு முடிவுகள்

மொத்த மதிப்பெண்கள்: 0 / 11

சரியான பதில்களும் காரணங்களும்:

டிசம்பர் 13, 2025

மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் - MCQ வினா விடை

மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் - MCQ வினா விடை



10. ஒரு நல்ல பிள்ளையாக இருக்க என்னால் முடியும், எல்லாவற்றிலும் என்னால் வெற்றி பெற முடியும், முழு உலகையும் என்னால் வெற்றி கொள்ள முடியும், எனது உள அமைதியை எனது வீட்டாருக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?

சரியான பதில்: (1) மனவுறுதி

11. எனது உள்ளத்தின் அமைதியை எனது நண்பர்களும் எனது வீட்டாரும் உணரட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந் படிமுறைக்குரியதாகும்?

சரியான பதில்: (2) பிரார்த்தனை

12. நான் பெற்ற உள அமைதி எனது நண்பர்களுக்கும் உனது குடும்பத்திற்கும். எனது பாடசாலையில் உள்ளோருக்கும், முழு நாட்டிற்கும் பகிர்கின்றேன். நான் வீட்டிற்கும் பாடசாலைக்கும் முழு நாட்டிற்கும் என எந்த தியான செயற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது?

சரியான பதில்: (3) மலர்வு

13. எனது தலை தளர்ந்து விட்டது எனது முழு உடலும் தளர்ந்து விட்டது என்ற செயற்பாடுகள் மனதை ஒரு நிலைப்படுத்தும் படிமுறைகளில் எத்தனையாவது?

சரியான பதில்: (1) முதலாம்

14. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டின் சரியான படிநிலை?

சரியான பதில்: (1) உடலைத்தளர்த்தல், மனதைத்தளர்த்தல், மனவுறுதி, பிரார்த்தனை, உதிப்பு

15. உடல், உள சுகத்திற்கான செயற்பாடுகளின் மூன்றாம், நான்காம் படிமுறைகள் யாவை?

சரியான பதில்: (1) திடசித்தம், பிரார்த்தனை (மனவுறுதி, பிரார்த்தனை)

16. குறைவாக நீர் அருந்தும் ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று

சரியான பதில்: (2) தோல் உலர்தல்

17. வெள்ளைப் பிரம்புடன் ஒருவரை வீதியில் கண்டவுடன் நீர் செய்ய வேண்டியது?

சரியான பதில்: (3) வீதியைக் கடக்க அவருக்கு உதவுதல்

18. சூரிய நமஸ்காரத்தில் ஈடுபட மிகவும் பொருத்தமான நேரம்

சரியான பதில்: (1) அதிகாலை (சூரியன் உதயமாகும் நேரம்)

19. நான் சுற்றுப்புற ஒலிகளை செவிமடுக்கின்றேன். எனது வகுப்பைச் சூழவுள்ள ஒலிகளை நன்கு செவிமடுக்கின்றேன். அடுத்துள்ள வகுப்புக்களில் ஒலியையும் நன்றாக செவிமடுக்கின்றேன் என்ற செயற்பாடுகள் தியான செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?

சரியான பதில்: (1) உள்ளத்தைத்தளர்த்தல்

20. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?

சரியான பதில்: (2) ஐந்து
டிசம்பர் 13, 2025

சுகாதாரமும் உடற்கல்வியும் - மாதிரி வினாக்கள்

சுகாதாரமும் உடற்கல்வியும் - மாதிரி வினாக்கள்




01. கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் சிறிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதற்காகவும் எனது மனதில் தோன்றிய ஆர்வம் எனது வீட்டிலுள்ள அனைவரது மனங்களிலும் தோன்றட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எது?

  • (1) மனவுறுதி
  • (2) மலர்வு
  • (3) பிரார்த்தனை
விடையைக் காண்க

சரியான விடை: (3) பிரார்த்தனை

02. ஒரு குழுவாகச் செயற்படும் போது மிகவும் பொருத்தமானது எது?

  • (1) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களுக்குச் செவிமடுத்து எப்போதும் அதனுடன் ஒத்துப்போதல்
  • (2) ஒருவர் எப்போதும் தனது கருத்துக்களை முதன்மைப்படுத்த எத்தனித்தல்
  • (3) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல்
விடையைக் காண்க

சரியான விடை: (3) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல்

03. தினமும் போதியளவு நீர் அருந்தாத ஒருவருக்கு ஏற்படக்கூடிய விளைவாக அமைவது எது?

  • (1) சிறுநீரின் நிறம் கடும் நிறமாதல்
  • (2) சௌகரியமாகச் சிறுநீர் கழிக்கமுடிதல்
  • (3) உடலில் இருந்து கழிவுப் பொருள்கள் சீராக வெளியேறுதல்
விடையைக் காண்க

சரியான விடை: (1) சிறுநீரின் நிறம் கடும் நிறமாதல்

04. இலங்கையில் பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களை ஆண்கள், பெண்கள் என வேறுபடுத்திக் காட்டுவதற்கு எந்தமுறை மிகப் பொருத்தமானது?

  • (1) நியமக் குறியீட்டு முறை மூலம் காட்டுதல்
  • (2) சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் மூலம் காட்டுதல்
  • (3) சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் காட்டுதல்
விடையைக் காண்க

சரியான விடை: (1) நியமக் குறியீட்டு முறை மூலம் காட்டுதல்

05. குழுவாக வேலைகளில் ஈடுபடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது எது?

  • (1) சுயமாக வேலைகளில் ஈடுபடல்
  • (2) கூட்டுணர்வுடன் செயற்படல்
  • (3) தனியாக வேலைகளைச் செய்தல்
விடையைக் காண்க

சரியான விடை: (2) கூட்டுணர்வுடன் செயற்படல்

06. மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாடுகளில் மூன்றாவது அமைவது எது?

  • (1) திடசித்தம்
  • (2) உதிப்பு
  • (3) உடலைத் தளர்த்தல்
விடையைக் காண்க

சரியான விடை: (1) திடசித்தம்

07. உடலில் இருந்து கழிவுப் பொருள்கள் சீராக வெளியேறுவதற்கு பிரதான காரணமானது எது?

  • (1) தினமும் உடற்பயிற்சி செய்தல்
  • (2) தினமும் உடன் உணவுகளை உண்ணுதல்
  • (3) தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்
விடையைக் காண்க

சரியான விடை: (3) தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்

08. சூரிய நமஸ்காரச் சந்தர்ப்பங்கள் பன்னிரண்டிலும் ஒரே வகையான மெய்நிலைகளைக் கொண்ட சந்தர்ப்பங்கள் இரண்டு எவை?



  • (1) 4 உம் 8 உம்
  • (2) 3 உம் 10 உம்
  • (3) 6 உம் 9 உம்
விடையைக் காண்க

சரியான விடை: (2) 3 உம் 10 உம்

10. ஒரு நல்ல பிள்ளையாக இருக்க என்னால் முடியும், எல்லாவற்றிலும் என்னால் வெற்றி பெற முடியும், முழு உலகையும் என்னால் வெற்றி கொள்ள முடியும், எனது உள அமைதியை எனது வீட்டாருக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?




11. எனது உள்ளத்தின் அமைதியை எனது நண்பர்களும் எனது வீட்டாரும் உணரட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந் படிமுறைக்குரியதாகும்?




12. நான் பெற்ற உள அமைதி எனது நண்பர்களுக்கும் உனது குடும்பத்திற்கும். எனது பாடசாலையில் உள்ளோருக்கும், முழு நாட்டிற்கும் பகிர்கின்றேன். நான் வீட்டிற்கும் பாடசாலைக்கும் முழு நாட்டிற்கும் என எந்த தியான செயற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,




13. எனது தலை தளர்ந்து விட்டது எனது முழு உடலும் தளர்ந்து விட்டது என்ற செயற்பாடுகள் மனதை ஒரு நிலைப்படுத்தும் படிமுறைகளில் எத்தனையாவது?




14. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டின் சரியான படிநிலை?




15. உடல், உள சுகத்திற்கான செயற்பாடுகளின் மூன்றாம், நான்காம் படிமுறைகள் யாவை?




16. குறைவாக நீர் அருந்தும் ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று




17. வெள்ளைப் பிரம்புடன் ஒருவரை வீதியில் கண்டவுடன் நீர் செய்ய வேண்டியது?




18. சூரிய நமஸ்காரத்தில் ஈடுபட மிகவும் பொருத்தமான நேரம்




19. நான் சுற்றுப்புற ஒலிகளை செவிமடுக்கின்றேன். எனது வகுப்பைச் சூழவுள்ள ஒலிகளை நன்கு செவிமடுக்கின்றேன். அடுத்துள்ள வகுப்புக்களில் ஒலியையும் நன்றாக செவிமடுக்கின்றேன் என்ற செயற்பாடுகள் தியான செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?




20. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?




டிசம்பர் 13, 2025

பண்டைய சமூக நிர்வாகக் கட்டமைப்பு: ஓர் ஆய்வு

🏛️ பண்டைய சமூக நிர்வாகக் கட்டமைப்பு: ஓர் ஆய்வு


அனுராதபுர மற்றும் பொலன்னறுவை காலப் பகுதிகளில் இலங்கையில் காணப்பட்ட நிர்வாக, சட்ட மற்றும் நீதித்துறை அமைப்புகள் குறித்த விரிவான விளக்கம்.

1. நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் மூன்று தாபனங்கள்

  • சட்டம் (சட்டமியற்றும் துறை)
  • நிர்வாகம் (நிறைவேற்றுத்துறை)
  • நீதி (நீதித்துறை)

2. சட்டமியற்றும் மற்றும் நிறைவேற்று துறைகள்

விபரம் ஆரம்பகாலம் தற்காலம்
சட்டங்களை இயற்றும் சபை அரசசபை பாராளுமன்றம்
நாட்டின் ஆட்சி முறை முடியாட்சி (ஆரம்பகாலம்)
நிர்வாகத் துறையின் கடமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவது

நீதித்துறையின் பொறுப்புகள்:

  1. சட்டத்தை மீறுவோரைத் தடுத்தல்.
  2. சமூகத்திற்கு ஏற்படும் கேடுகளைத் தவிர்த்தல்.
  3. மக்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொடுத்தல்.

3. அரசசபை மற்றும் சட்டத் தொடர்கள்

ஆரம்பகால அரசசபைகள் **சட்டத்தையும் நிர்வாகத்தையும் மேற்கொள்ளும் உயர் சபையாகக்** காணப்பட்டது.

'எக்தென் சமியன்' (கி.பி. 9ம் நூற்றாண்டு): சட்டம் மற்றும் நிர்வாகத்தைக் குறிக்கும் சொல்.

  • உருவானது: ஏக அஸ்தான சாம்ய
  • விளக்கம்:
    • ஏக அஸ்தான: அரசசபை
    • சாம்ய: அனுமதி பெற்ற
  • 'வத்ஹிமியன் வதால': அரசரின் ஆணை.

4. அதிகாரிகள் மற்றும் பதிவுகள்

'சபா' அதிகாரிகள் (நீதிமன்றம்)

  • இடம்பிடித்தோர்: அரச காணிகளை விகாரைக்கு அன்பளிப்புச் செய்த அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள்.
  • பொறுப்புக்கள்:
    1. காணிகளுக்கு எல்லையிடுவது.
    2. காணிகளை அனுபவிப்பது தொடர்பான நிபந்தனைகளைப் பதிவது.
  • இலக்கியப் பெயர்: மஹலே

மஹலேகம் மற்றும் செயலாளர்

  • மஹலேகம் பொருள்: பதிவாளர் நாயகம்.
  • அரச செயலாளரின் பொறுப்பு: அரச கடமைகளைப் பதிந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.

5. அனுராதபுர கால உள்ளூராட்சி சபைகள்

அனுராதபுர காலத்தில் உள்ளூர் நிர்வாகம் சிறப்பாக இயங்க, பல உள்ளூராட்சி சபைகள் முக்கியப் பங்காற்றின. இந்த நிறுவனங்கள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டது.

உதாரண நிர்வாக அமைப்புகள்:

  • கிராம சபை (Gama Sabha): கிராம மட்டத்தில் நீதி மற்றும் நிர்வாகத்தை வழங்கியது.
  • நகர சபை (Nagara Sabha): நகரப் பகுதிகளின் சுகாதாரம், வர்த்தக ஒழுங்கு போன்றவற்றை கவனித்தது.
  • மத்தியஸ்த சபை: கிராம நிர்வாகத்தை மைய அரசோடு இணைக்கும் பாலமாகச் செயல்பட்டது.

மேலும் பண்டைய நிர்வாகம் பற்றிய கேள்விகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளலாம்!

23 ஜன., 2021

ஜனவரி 23, 2021

பரீட்சார்த்திக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியமானதா?

 வழிகாட்டல் ஆலோசனையானது உண்மையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரும் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படப்போகிறது என்ற அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த பின்னரும் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வெற்றி தோல்விகளை உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.

ஏனெனில் ஒவ்வொரு பரீட்சை முடிவுகளும் வெளியிடப்பட்ட பின்னர் மனதை நெகிழ வைக்கக்கூடிய சம்பவங்கள் பல கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு இந்த வழிகாட்டல் ஆலோசனைகள்  3 கட்டமாக மேற்கொள்ளப்படுவதானது மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் மன அழுத்தம் போன்ற உள்ளத்துடன் தொடர்புபட்ட பல கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் என்பது யதார்த்தமாகும்.



ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பாடசாலைகளிலும் வழிகாட்டல் மற்றும்  உள ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுக்காக சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களா என்பது  ஒருபுறமிருக்க  இவர்களினால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் வழிகாட்டல் மற்றும்  உளவளத்துணை செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடாத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் சமகாலத்தில் எழுப்பப்படுகின்றன. பாடசாலைகளிலும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உளவளத்துணை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக  அமையவில்லை  என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. 

குறிப்பாக பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும்  உளவளத்துணை செயற்பாடானது தொழில்வாண்மை  உளவளத்துணையாளர்களினால் முன்னெடுக்கப்படுவதில்லை. ஓரிரு மாதகால உளவளத் துணைக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவர்களினால் இத்தகைய சேவை முன்னெடுக்கப்படுவதானது அச்செயற்பாடுகளில் வினைத்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் எதிர்பார்க்கின்ற வெற்றியையும் அளிப்பதாக அமையவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

இதன் நிமித்தம் பாடசாலைகளில் உளவளத்துணையாளர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள் தொழில்வாண்மை தகைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

அதனால் கல்வி வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற வெற்றி தோல்விகள் அவர்களது எதிர்காலத்தை சூனியமாக்காது வளமுள்ளதாக்குவதற்கான சிறந்த வழிகாட்டல்களும்  உளவளத்துணை வழங்கல்களும் அவசியமாகிறது. இவை அவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மாத்திரமன்றி முழு வாழ்க்கை பயணத்திலும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியாளர்களாக மிளிர்வதற்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமாகும்.

 

10 ஜன., 2021

ஜனவரி 10, 2021

கல்வி அமைச்சின் மிக முக்கியமான லிங்கனை நீங்கள் மிக இலவாக செல்ல வேண்டுமா?

இலங்கையில் அதிக பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரு அமைச்சாக காணப்படுவது கல்வி அமைச்சி என்றால் அது மிகையாகாது. இந்த வகையில் அதன் சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ள உங்களுக்கு அதன் கல்விப் பிரிவு ஏற்பாடுகள் செய்யதுள்ளது. இதற்காமைய மிக முக்கியமான பல லிங்கினை கீழே தருகின்றேன்.

கல்விக் கட்டமைப்பு



*Ministry of education (MOE)*

http://www.moe.gov.lk/web/index.php?lang=ta 

பரீட்சைத் திணைக்களம்

https://www.doenets.lk/

 தேசிய கல்வி நிறுவகம்

http://www.nie.lk/default3

 கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

http://www.edupub.gov.lk/

 *E-THAKSALAWA*

http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/

 ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி

http://www.nie.lk/seletguide3

பாடசாலை மாணவர்களுகான புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

http://www.edupub.gov.lk/BooksDownload.php

 கடந்த கால வினாத்தாள்கள்

https://www.doenets.lk/pastpapers

 மாதிரி வினாத்தாள் மற்றும் புள்ளித்திட்டம்

https://www.doenets.lk/evaluationreports

பரீட்சைப் பெறுபேறு

https://www.doenets.lk/examresults

 கல்வியமைச்சின் சுற்றுநிருபம்

http://www.moe.gov.lk/web/index.php?option=com_circular...

ஜனவரி 10, 2021

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் பட்டமேற் கல்வி டிப்ளோமா (PGDE) கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆசிரியர்களாக பணிபுரிவோர்கள் தங்களுடைய வாண்மை விருத்தியை மேம்படுத்தும் முகமாக அவர்கள் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.


 இதற்கமைய ஆசிரியர்கள் பட்டமேற் கல்வி டிப்போளமா கற்கைநெறியை மேற்கொள்ள இலங்கை திறந்த பலக்கைலக்கழம் வாய்ப்பளித்துள்ளது. இந்த வகையில் கற்பதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ள கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து பெறறுக் கொள்ள முடியும்.

விண்ணப்பங்கள் எல்லாமே ஒன்லைன்ட் மூலமாக மேற்கொள்ளப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதன் 10.01.2021 தொடக்கம் 21.02.2021 ஆந் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் .

Please click here for online application 

ஜனவரி 10, 2021

மாணவர்களின் உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் திட்டம்

2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்காக வட்டியில்லாத அடிப்படையில் கடன் வசதியை வழங்கி உயர்கல்வியைத் தொடர அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.



இதனை பெற்றுக் கொள்ளும் முகமாக கல்வி அமைச்சு அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

நீங்கள் அதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள இந்த லிங்கினை கிளிக் செய்யவும்.

உங்களை பதிவு செய்வதன் ஊடாக விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் அதற்காக கீழே உள்ள லிங்களை கிளிக் செய்யவும்.

Application உங்களுக்கான விண்ணப் படிவத்தனை பெற்று்க் கொள்ள

 

26 ஆக., 2011

ஆகஸ்ட் 26, 2011

Free call from Facebook


எங்களில் பலர் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறோம். இன்று பல நாடுகளில் அதனை தடையும் செய்திருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம்.

இலகுவான முறையில் நண்பர்களை கூடுதலாக அடைந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் பேஸ் புக்கில் கணக்கு வைத்திருந்து அதில் உள்ள நண்பர்களை உங்களின் நண்பர்களாக இணைத்துக் கொள்ள முடியும்.

இதில் ஒருவரின் நண்பர்களை மற்றவர்கள் கண்டு அவர்களுக்கு  செய்தி அனுப்பி அவர்களை எங்களுடைய நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.


பேஸ்புக் பல்வேறு வகையான சமூக தளங்களில் அதிகளவு அங்கத்தவர்களை கொண்டுள்ள ஒரு தளமாக இது காணப்படுகின்றது.

இந்த வரிசையில் அதனுடன் இதனைந்தாக இன்று இலவசமாக பேஸ்புக் ஊடாக குரல்வழி அரட்டை வசதி வழங்கியுள்ளார்கள் என்பது எல்லோருக்கும் ஒரு இனிப்பான செய்தியாகும். Sonephone  என்ற பெயரில் தான் இது துவங்கப்பட்டுள்ளது இதனையும் நாங்கள் பயன்படுத்தித்தான் பார்ப்போமே!

அப்படி என்னதான் இருக்கிறது என்று

28 மார்., 2011

மார்ச் 28, 2011

How unlock PDF file

எமது வாழ்வியியல் விளையாட்டில் பல்வேறுபட்ட அனுபங்களை நாங்கள் பெற்றுக் கொள்ளுகிறோம். ஒருவர் மூடி வைத்திருப்பதை நாங்கள் திறந்து பார்ப்பது மற்றும் தாங்கள் மட்டும் வாழ வேண்டும், தாங்கள் மட்டுமே இந்த வையகத்தில் சிறப்புப் பெற்று இந்த பார் போற்றும் அறிவிலிகளாக வாழ பலர் வழி  சமைப்பது என்ற நினைப்பு.
 எது  எப்படித்தான் இருந்தாலும், வல்லவனுக்கு வல்லவன் வைகத்தில் இருப்பது திண்ணம். இது இன்று உலகில் நிறுவிக்கப்பட்ட உண்மையும் கூட அப்படியான சந்தர்ப்பத்தில் எமக்குத் தேவை ஏற்படும் போது நாங்களும் அதன் பயனை அடைந்து வாழத்தானே வேண்டும்.

 இதனை எழுதும் போது  TM .சௌந்தராஜனின் பாடல் வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. ”கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான் அது ஒருத்தருக்காக கொடுத்தான் இல்லை அது ஊருக்காக கொடுத்தான்”
 இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே உங்களுக்கு விளங்கி இருக்கும் என்று எண்ணுகிறேன்.
 நாங்கள் எங்களுடைய பல தரவுகளை ஆவணங்களாக இலகுவாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் ஒரு கோர்ப்பு தான் இந்த PDF format இதனை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகிறோம்.

இருந்தும் பல சுயநலவாதிகளின் நடவடிக்கைகளால் அதனை அவர்கள் யாருமே பிரதி எடுக்கக் கூடாத  வகையில் Lock கொடுத்திருப்பார்கள். அவ்வாறான PDF கோர்ப்புகளை நாங்கள் எவ்வாறு Cracker செய்து பயன்படுத்த முடியும் என்பதற்கு துணைபுரியும் இரண்டு தளங்கள் உங்களுக்காக இங்கே தரப்படுகின்றது.

முதலில் இங்கே கிளிக் பண்ணவும் ....................................
.................. இங்கேயும் கிளிக் பண்ணவும் ...................................
அடுத்து இங்கே சென்று உங்கள் PDF திறக்கவும்
1st .................. Click here  (you can crack 5MB only)

2nd .................. click here (you can crack 7MB only)

Next down load here 
  Next another one here ........................


அடுத்து இங்கே சென்று உங்கள் PDF திறக்கவும்

29 டிச., 2010

டிசம்பர் 29, 2010

அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப் கணினி விடயம்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்.



உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

1 டிச., 2010

டிசம்பர் 01, 2010

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010



மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட அம்சமாகும்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த பாலியல் நோய் இருந்து வந்தாலும் ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை என்பதும் ஒரு விசித்திரம். அவன் உலகில் தோன்றிய காலம் தொடக்கம் இறைவனால் பல வகையான அறிவுரைகள் காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன. இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமிய சமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையான நோயும் ஒன்றாகும்.

மேலும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனை ஒழிப்பது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அதனைக் குறைக்க முடியும் என்பது தான் கண்டு கொண்ட உண்மையாகும்.

மனிதனினால் தீர்க்கப்படாத பிரச்சினையில்  இந் நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின் அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால் அவனால் இதனை சரியான முறையில் அடையாளம் கண்டு அதற்கான மருந்தினை வழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கே பாரிய சவாலாக விளங்குகின்றது.

உலகெங்கும் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும் டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ் தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளை எடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு இவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது. 2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  
செப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 25 வீதம்  குறைந்துள்ளதாக எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான ஐ.நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.

எயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.

ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HIV/AIDS  பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்
·         இந் நோய் (மனித பெற்ற நீர்ப்பீடண குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடண குறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
·         HIV தொற்று ஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றலாம்.
·         மருந்துகளினால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்த முடியாது
·         நீங்கள் HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து  உங்களையும் காப்பற்றலாம்.
எவ்வாறு கடத்தப்படுகிறது
·         பாதுகாப்பற்ற ஊடுருவும் வகையிலான உடலுறவு
·         குருதியேற்றலின் போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்பு மாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப் பொருள்களைப் பெறல்.
·         தோற்றடைந்த ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனைய உபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
·         HIV தொற்றடைந்த தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,

HIV/AIDS  பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
·         கட்டித்தழுவுதல்.
·         முத்தமிடல்.
·         கை குலுக்குதல்.
·         உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.
·         நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
·         ஒரே தடாகத்தில் நீந்துதல்.
·         மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
·         பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்.
·         பாலுறவில் ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.
·         ஆணுறைகளை சரியாகப் பயன்படுத்துதல்
·         பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.



22 நவ., 2010

நவம்பர் 22, 2010

இலங்கையின் புதிய அமைச்சரவையின் விபரம்- 22.11.2010


 இலங்கைத் தீவில் இன்று புதிய அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது கடந்த தேர்தலில் வெல்ல வைக்கப்பட்ட அவரது ஆட்சியை மேலும் ஆறு வருடங்கள் நீடிப்பதற்கான சத்தியப்பிரமானம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேரியது. அதனைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் விரபங்கள் உங்களுக்காக இதோ........................

 ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தி.மு.ஜயரத்ன - பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க - மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் - நீதி
பசில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் - வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன - பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க - தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி - தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே - விவசாயம்
பந்துல குணவர்தன - கல்வி
மகிந்த சமரசிங்க - பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார - காணி, காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க - தனியார் பிரயாண சேவைகள்
மகிந்தயாப்பா அபேவர்தன - கைத்தொழில்
கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகம்
குமார வெல்கம - போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
சந்திரசிறி கஜதீர - சிறைச்சாலை புனர்வாழ்வு
சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே - சிறு ஏற்றுமதி
டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜகத் புஷ்பகுமார - தென்னை அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க - கலாசாரம்
மகிந்த அமரவீர - இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன - கமநல சேவைகள்
குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பு
மகிந்தானந்த அலுத்கமகே - விளையாட்டு
தயாசிறீத திசேறா - அரச வளங்கள்
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய - தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய - தேசிய உரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன - உற்பத்தித் திறன்
நவீன் திஸாநாயக்க - அரச முகாமைத்துவம்

சிரேஷ்ட அமைச்சர்கள்

பிரதமர் தி.மு.ஜயரத்ன - பௌத்த சாசனம், மத விவகாரம்
ரத்னசிறி விக்ரமநாயக்க - ஆட்சி பரிபாலனம், உட்கட்டமைப்பு வசதிகள்
டீ.ஈ.டபிள்யூ. குணசேகர - மனித வளங்கள்
அதாவுத செனவிரத்ன - கிராமிய விவகாரம்
பி.தயாரத்ன - உணவு, போசணை
ஏ.எச்.எம்.பௌசி - நகர அபிவிருத்தி
எஸ்.பி.நாவின்ன - நுகர்வோர் நலன்
பியசேன கமகே - பொது வளங்கள்
திஸ்ஸ விதாரண - விஞ்ஞானம்
சரத் அமுனுகம - சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு _